‘கஜா’ புயலுக்கு நிவாரணம் கேட்டு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்: தம்பிதுரை

 ‘கஜா’ புயலுக்கு நிவாரணம் கேட்டு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்றுமக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூர் மாவட்டம், புஞ்சை புகளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மூர்த்திபாளையம், அய் யம்பாளையம்,கீழ் ஒரத்தை,தவிட்டுபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களிடம் குறை கேட்பு மனு பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரைபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகம் இதுவரை சந்தித்திராத புயலாக கஜா புயல் இருக்கிறதுஎனவும்,யானையை போல் வந்த புயலால் பல மாவட்டங்களில் வாழை தென்னை, மா, பலா, முந்திரி என விவசாய தோட்டங்கள் முற்றிலும் நிர்மூலமாகி விட்டது எனவும் கூறினார்., சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர் உண்மையிலேயே பாதிப்பு அதிகம்என கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.. அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க.வை சேர்ந்த 50உறுப்பினர்களும்இ காவிரி பிரச்சினைக்கு குரல் எழுப்பியதைப் போல் கஜா புயலுக்கும் நிவாரணம் கேட்டு குரல் கொடுப்போம் என தம்பிதுரை தெரிவித்தார்..

Related Posts