கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை

கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்,

மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 4 அரசு மற்றும் அரசு உதவிபெறும்  பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 314மாணவ  மாணவிகளுக்கு ஒரு  கோடி ரூபாய் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,மேகதாது விவகாரத்தில்  தமிழகத்தினுடைய உரிமையை மீட்டு எடுக்க தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.கஜா புயலால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,  12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட இதுவரை தரவில்லை  எனவும், அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Related Posts