கஜா புயல் நிவாரணத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்திப்பு

கஜா புயல் நிவாரணத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு பொதுமக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். தமிழக அரசும் ஆயிரம் கோடி ரூபாய்அளவுக்கு நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளது. ஆனால் சேத மதிப்பு 15 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்பதால் மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய குழுவினரும் நேரில் வந்து பார்வையிட்டு சேத விவரங்களை அறிந்து சென்றனர். ஆனால் இன்னும் மத்திய அரசு நிதி ஒதுக்காமல் உள்ளது. இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும் போது,கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட இன்னும் ஒதுக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லியை இன்று அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரணத்துக்கு உடனே நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Related Posts