கஞ்சா வியாபாரியை உப்பு வியாபாரியாக மாற்றிய காவல் ஆய்வாளர்

மதுரையில், பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வந்தவர், தற்போது, உப்பு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

மதுரை மாவட்டம் மகபூப்பாளையத்தைச் சேர்ந்த இப்ராகிம் ஷா. கஞ்சா வியாபாரியாக இருந்த இவர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஃபிளவர்ஷீலா, இப்ராஹிம் ஷாவை அழைத்து அறிவுரை கூறினார். இதில் தெளிவுபெற்ற இப்ராகிம் ஷா, திருந்தி வாழ ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என கண் கலங்கினார். இதையடுத்து, தனது செலவில் சைக்கிள், உப்பு மூட்டையை வாங்கிக் கொடுத்து, இப்ராகிம் ஷாவை, ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா உப்பு வியாபாரியாக மாற்றினார். தற்போது, இப்ராஹிம் ஷா முழுவீச்சில் உப்பு வியாபாரம் செய்து வருவதாகவும், அவர் மீண்டும் தடம் மாறுகிறாரா என்பதை கண்காணித்து வருவதாகவும் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா தெரிவித்தார். பெண் ஆய்வாளரின் இந்த முயற்சியை, உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என, பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Posts