கடத்தல் சிலைகளை வைத்திருப்போர் தாமாக முன் வந்து திருப்பிக் கொடுத்துவிட்டால் தண்டனையில்லை

கடத்தல் சிலைகளை வைத்திருப்போர் தாமாக முன் வந்து திருப்பிக் கொடுத்துவிட்டால் தண்டனையில்லை என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணை இல்லத்தில் இன்று அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர், வீட்டுக்குள் இருந்து 80 சிலைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பொன். மாணிக்கவேல், கடத்தல் சிலைகளை வைத்திருப்போர் ஒரு மாதத்துக்குள் தங்களிடம் இருக்கும் சிலைகளை திருப்பிக் கொடுத்து விட்டால் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் எனவும், தவறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். கடத்தல் சிலைகள் என்று தெரிந்தால் அதுபற்றி தாமாகவே முன்வந்து தகவல்களை அளிக்கலாம் எனவும், தகவல்கள் வரவேற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார், சிலைக் கடத்தலில் தொடர்பில்லாதவர்கள் யாருமே அஞ்ச தேவையில்லை எனவும், குற்றமற்றவர்கள் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் அவர் கூறினார், சிலைக் கடத்தல் தொடர்பாக அறநிலையத் துறையில் மேலும் 9 அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.

Related Posts