கடந்த காலத்தின் அநீதிகளை எடுத்துக்காட்டியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவையில் அமித்ஷாவின் பேச்சு கடந்த காலத்தின் அநீதிகளை எடுத்துக்காட்டியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து மத்திய அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

அவரது பேச்சு தொடர்பாக, பிரதமர் மோடி தனது டுவிட்டரில், அமித்ஷாவின் உரை விரிவாகவும், நுண்ணறிவோடு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த கால அரசின் மிகப்பெரிய அநீதிகளை துல்லியமாக எடுத்துக்காட்டும் வகையில் அமித்ஷாவின் உரை அமைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், அமித்ஷாவின் உரை, ஜம்மு-காஷ்மீரில் உள்ள சகோதரிகளுக்கு ஆதரவான மத்திய அரசின் தெளிவான பார்வையை, இலக்கை வெளிப்படுத்தியிருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts