கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 10 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 10 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லி : மே-28

உஜ்வாலா யோஜனா திட்டம் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி காணொளி  மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உஜ்வாலா திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதாக கூறினார். கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். கடந்த 60 ஆண்டுகளில் வெறும் 13 கோடி எரிவாயு இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related Posts