கடந்த 5 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை சரிவு

உயர்கல்வி சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2018-2019ம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-2015ம் ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் 42 லட்சத்து 54 ஆயிரத்து 919 மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில்  37 லட்சத்து 70 ஆயிரத்து 949 ஆக குறைந்துள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளில்  98 லட்சத்து 69 ஆயிரத்து 520 ஆக இருந்த மாணவர்கள் சேர்க்கை தற்போது 91 லட்சத்து 98 ஆயிரத்து 205 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 71.1 சதவிகிதமாகவும், மாணவிகளின் சேர்க்கை 28.9 சதவிகிதமாகவும் உள்ளது.

Related Posts