கடன் வட்டி விகிதம் 8.25 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைப்பு

கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 8.25 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாகக் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. கடந்த பிப்ரவரி, ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் ரெப்போ வட்டியைக் ரிசர்வ் வங்கி குறைத்தது. ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது, வணிக வங்கிகளுக்கு ஏற்படும் செலவினங்களும் குறையும். அந்தப் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். ஆனால், பெரும்பாலான வங்கிகள் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அடிப்படை வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது, ஸ்டேட் வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 8.25 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடு, வாகனக் கடன், உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி குறையும். அதேநேரம், எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதம், 10 முதல் 25 பைசா வரையில் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Posts