கடன் வாங்கி ஏமாற்றும் கோடீஸ்வர்ர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடன் வாங்கி ஏமாற்றும் கோடீஸ்வர்ர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் தமிழ்நாடு வங்கி நிதி வசூலிப்போர் சங்கத்தின் 12வது மாநில மாநாட்டை துவக்கி வைத்து பேசிய அவர், வங்கிகளுக்கு நிதி வசூல் செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிடக் கோரியும், மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை செய்துத் தர வலியுறுத்தியும் மாநாடு நடைபெறுவதாக தெரிவித்தார். நாட்டில் மிகப்பெரிய கோடீஸ்வர்ர்கள் வங்கிகளில் கடனை வாங்கி திரும்பி செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். கடன் வாங்கி ஏமாற்றும் கோடீஸ்வர்ர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வாராக்கடன் அதிகரித்த்தால் கல்வி, விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய கடன்கள் வழங்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Related Posts