கடல்சீற்றம் – நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை

தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால்ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி : ஏப்ரல்-21

இந்திய கடல்சார் தகவல் மையத்தின் எச்சரிக்கையின் படிகன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் வரையிலான கடல்பகுதியில் அலைகள் 11 அடி உயரத்திற்கு மேலாக எழும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல்சீற்றமாக காணப்படும் என்று தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்திருந்தார். இதையடுத்துகன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் பட்டணம்முட்டம்குளச்சல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 ஆயிரம் நாட்டுப்படகுகள் கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால்குமரி மாவட்டத்தில் இருந்து 1500 விசைப்படகுகள் கடலுக்கு  செல்லவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன்மண்டபம்வேதாளைராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த  300நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில் கடல் சீற்றம் குறைவு காரணமாக தூத்துக்குடியில் திரேஸ்புரம்தாளமுத்துநகர்சிலுவைப்பட்டிராஜபாளையம் பகுதியை நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு வழக்கம் போல் மீன் பிடிக்க சென்று வந்தனர். கடலில் அலைகள் வழக்கம் போல் உள்ளதாகவும் எந்த சிரமின்றி சென்று வந்ததாகவும் மீனவர்கள் கூறினர்.

Related Posts