கடைசி டி20 போட்டி : இந்திய அணி டி-20 தொடரை வெல்லும்மா ?

இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது.

முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வென்றது. மூன்றாவது போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. 2-வது போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. கேப்டன் விராத் கோலி, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ரிஷப் பந்த்தின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. கடந்த போட்டியில் ஆடிய வீரர்களே இந்தப் போட்டியிலும் இடம் பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.  தென்னாப்பிரிக்க இளம் வீரர்களை கொண்ட அணியாக இருக்கிறது. கேப்டன் டிகாக், டேவிட் மில்லர் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் அந்த அணி தடுமாறி வருகிறது. இன்றைய போட்டியில் தங்கள் தவறுகளை திருத்திக்கொண்டு அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி டி-20 தொடரை வெல்லும்.

Related Posts