கட்சியை விட நாடு தான் முதன்மையானது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்


பாஜக உதயமான ஏப்ரல் 6ஆம் தேதியையொட்டி, தனது வலைதள பக்கத்தில் எல்.கே. அத்வானி எழுதியிருக்கும் கடிதத்தில், தனக்கு முதன்மையானது நாடு என்றும் அதற்கு அடுத்து தான் கட்சி என்றும் இதன் பிறகு தான் தனது சொந்த நலன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை 6 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்த குஜராத் காந்தி நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்த கடித்த்தில் கூறியுள்ளார்.

அத்வானி கருத்து குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பாஜகவின் உண்மையான சாராம்சங்களை அத்வானி மேற்கோள் காட்டியிருப்பதாகவும், பாஜகவின் தொண்டராக இருப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts