கட்சி நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள்,  கட்-அவுட், பிளக்ஸ் போர்டுகளை வைக்கக்கூடாது

கட்சி நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள்,  கட்-அவுட், பிளக்ஸ் போர்டுகளை திமுக-வினர் வைக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக அக்கட்யின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க.வினரின் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானது மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார். திமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு, பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளை பல முறை அறிவுறுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், ஒன்று அல்லது இரண்டு பேனர்களை உரிய அனுமதி பெற்று வைக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் பேனர் வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, அது அறவே நிறுத்தப்பட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த அறிவுரையை மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியினரை ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Related Posts