கட்சி மற்றும் ரசிர்கள் சங்கம் வரும் 3 ஆம் தேதி மறுசீரமைக்கப்பட்டு புதிய எழுச்சியுடன் தொடங்கும்

கட்சி மற்றும் ரசிர்கள் சங்கம் வரும் 3 ஆம் தேதி மறுசீரமைக்கப்பட்டு புதிய எழுச்சியுடன் தொடங்கவுள்ளதாக லட்சிய திமுக நிறுவனத் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசியலில் மீண்டும் புதிய பாதையில் பயணிக்கவுள்ளதாகவும், வரும் 3ஆம் தேதி கட்சி மற்றும் ரசிகர் சங்கத்தை மறுசீரமைத்து புதிய எழுச்சியுடன் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். நடிகர் சிம்பு மீது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் காழ்ப்புணர்ச்சி காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். கருணாஸ் பேசியது தவறு தான் எனவும், ஆனால் அவ்வாறு பேசியதற்கு கருணாஸ் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். கருணாஸை கைது செய்த அரசு அவதூறாக பேசிய எச்.ராஜா, எஸ்.வி. சேகரை ஏன் கைது செய்யவில்லை என்ற எதிர்கட்சிகளின் கேள்விக்கு அரசு மதிப்பளிக்கவில்லை எனவும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

Related Posts