கட்டாய தலைகவசம் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை

கட்டாய தலைகவசம் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி  தெரிவித்துள்ளது.

                இருசக்கர வாகனத்தில் இரண்டாவது நபருக்கும் தலைகவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய தலைகவம்சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது. அறிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள், அரசு தாக்கல் செய்த பதில் மனு திருப்தியாக இல்லை என்று தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் கட்டாய தலைக்கவசம் சட்டத்தை போக்குவரத்துக் காவலர்கள் முறையாக அமல்படுத்தவில்லை எனவும், அரசு உருவாக்கும் சட்டத்தை தான் அமல்படுத்தச் சொல்வதாக கூறிய நீதிபதிகள், கட்டாய தலைக்கவம் என்பதை ஏதோ நீதிமன்றம் பிறப்பிக்கும் சட்டமாக பார்க்கக் கூடாது  என கூறினர். காரில் செல்லும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட சீட் பெல்ட் அணிவதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

Related Posts