கணக்கில் வராத சொத்துக்கள் எனக்கு இல்லை : கார்த்தி சிதம்பரம்

கணக்கில் வராத சொத்துக்கள் எதுவும் தமக்கு இல்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கணக்கில் வராத சொத்துக்கள் எதுவும் இருந்தால் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சொத்துக்கள் பற்றிய முழுவிவரத்தை வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் அத்தனையும் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டவை என்று தெரிவித்தார்.

Related Posts