கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் திறப்பு

சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டுள்ளது.

கண்டலேறு அணியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என ஆந்திர மாநில முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதனை பரிசீலித்த அம்மாநில அரசு 8 டி.எம்,சி நீரை திறக்க ஒப்புக்கொண்டது. முதற்கட்டமாக கண்டலேறு அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மாலைக்குள் இந்த அளவானது 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும் என்று அம்மாநில பொதுப்பணித்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Related Posts