கண்டலேறு அணையில் 24ம் தேதி தண்ணீர் திறப்பு

கிருஷ்ணா நதியின் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு வருகிற  24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இம்மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் பூண்டி நீர்தேக்கத்திற்கு இந்த நீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் பெய்த கனமழையால் ஆந்திர அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.இதையடுத்து தண்ணீர் திறந்துவிட ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. கண்டலேறு அணையில் தற்போது 8 புள்ளி 61 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் கையிருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக உள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நீரை திறந்துவிட ஒப்புதல் அளித்துள்ளார். கிருஷ்ணா நதி நீர் பூண்டி நீர்த்தேக்கத்தை அடையும் போது சென்னை நகர மக்களுக்கு குழாய் மூலம் நீர்விநியோகம் வழங்குவதில்  முன்னேற்றம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts