கத்தியை தரையில் உரசி தீப்பொறி பறக்க விட்டு  டிக்-டாக் வீடியோ எடுத்த 2 பேர்  கைது 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த தீயம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சரண்குமார், மணிகண்டன் ஆகிய இருவரும் அங்குள்ள வெல்டிங் கடை ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.

 

நேற்று முன்தினம் இரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை சாலையில் உரசி தீப்பொறி பறக்க கூச்சலிட்டு சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இட்த்திற்கு வந்த காவல்துறையினர் சரண்குமார், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள், ‘டிக்-டாக்’ செயலியில் வீடியோ எடுப்பதற்காக இந்த செயலில் ஈடுப்பட்டதாக  தெரிவித்தனர்.

 

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாதவரம் துணை ஆணையர் ரவளிபிரியா எச்சரித்தார்.

Related Posts