கத்திரி வெயில் இன்று தொடக்கம் – வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என தகவல்

அக்னி நட்சத்திர காலம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குவதால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை : மே-04

தமிழகத்தில், கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரித்த நிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கத்திரி வெயிலானது இன்று தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்க இருக்கிறது. எனவே, வரும் நாட்களில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்றும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேநேரத்தில், வெப்பச்சலனம் காரணமாக, சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts