கத்திரி வெயில் நாளை தொடங்கவுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மழை

கோடையின் உச்சக்கட்ட வெயில் காலமாக கருதப்படும், கத்திரி வெயில் நாளை தொடங்க உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : மே-03

தமிழகத்தில், கோடை தொடங்கும் முன்பே மக்களை வெயில் வாட்டியெடுக்க ஆரம்பித்தது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இந்நிலையில், கத்திரி வெயிலானது நாளை தொடங்கி, 28 ஆம் தேதி வரை நீடிக்க இருகிறது. வேலூர், கரூர், மதுரை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி முதல் 107 டிகிரி வரை இருக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில், வெப்பச்சலனம் காரணமாக, சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Posts