கத்தோலிக்க பாதிரியார்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து புதிய ஆணையை வெளியிட்டார்  போப் பிரான்சிஸ் 

ஆஸ்திரேலியா, சிலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்கள் ஒவ்வொன்றிலும், பாதிரியார்களின் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வழிமுறை ஒன்றை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் உருவாக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறினார்..

பாதிரியார்களின் பாலியல் குற்றம் குறித்து யாரும் அறிந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அவருக்கு உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களிடம் புகார் அளிக்கவேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் தனது ஆணையில் குறிப்பிட்டு உள்ளார்.

Related Posts