கனடா நாடாளுமன்றத்தினை கலைத்த ஜஸ்டின் ட்ருடோ

கனடா நாடாளுமன்றத்தினை கலைத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ உத்தரவிட்டு உள்ளார்.

ஜஸ்டின் ட்ருடோ அரசின் மீது கடந்த பிப்ரவரியில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. ஊழல் குற்றச்சாட்டு பற்றிய வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் ஏற்படுத்தி கொள்ள, அந்நாட்டின் அட்டர்னி ஜெனரலான ஜோடி வில்சனுக்கு, ட்ருடோ மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர் என்பது புகார். இது அந்நாட்டு அரசியலில் புயலை கிளப்பியது.  அரசில் உயர்மட்டத்தில் இருந்த பலர் ராஜினாமா செய்ய நேர்ந்தது.  இந்த நிலையில், கனடா நாடாளுமன்றத்தினை ட்ருடொ கலைத்து உள்ளார்.  இதையடுத்து வருகிற அக்டோபர் 21ந்தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. 2வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் ட்ருடோ தயாராகி வருகிறார்.

Related Posts