கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுசேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மேற்குவங்கம், ஒடிசா, மத்திய மகாராஷ்டிரா மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.  இதனால் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts