கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில், உத்தராகண்ட், ஹரியாணா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம்,கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார், இமாச்சல், மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சலம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts