கனமழையால் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்த வெள்ள நீர்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

சென்னையில் சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, ராயபேட்டை, மெரினா, பாரிமுனை, ராயபுரம், திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் அடையாறு இசைப்பள்ளி அருகே உள்ள ஆர்.கே. மடம் சாலையில் பெரிய மரம் ஒன்று சாலையில் முறிந்து விழுந்ததில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருவால் விசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், நாசரேத், உடன்குடி, ஆத்தூர், ஆறுமுகநேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Related Posts