கனிமொழிக்கு எதிர்ரான வழக்கு வாபஸ் : தமிழிசை

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழியை சௌந்தர ராஜன் போட்டியிட்டார். மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கனிமொழியின் வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் இருந்ததாகவும், அது தொடர்பான தனது முறையீட்டை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாகவும் கூறியிருந்தார். மேலும், கனிமொழியின் கணவர், மகன் சிங்கப்பூர் குடிமக்கள் என்றும், வருமானவரி தாக்கல் பத்திரத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை சௌந்தர ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளார். இந்த மனு மீது அக்டோபர் 14 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Posts