கன்னியாகுமரி மீனவர்கள் நடுக்கடலில் தவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 150-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உணவின்றி கோவாவில் தவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து 15 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 150 மீனவர்கள், புயலுக்கு பயந்து கடந்த 5 ஆம் தேதி கோவாவில் உள்ள வாஸ்கோடா துறைமுகத்தில் தஞ்சமடைய சென்ற போது, அவர்களையும் அவர்கள் சென்ற விசைப்படகுகளையும் துறைமுகத்தின் உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தவித்து வருகின்றனர். உணவு, தண்ணீரின்றி தவிப்பதாக தமிழக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts