கபிணி அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு  குறைப்பு

கபிணி அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு  குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா : ஜூன்-30

கர்நாடகாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக கபினி அணையில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 25 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. 2 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட நீர் இன்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இந்நிலையில் கபினி அணையில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 25 ஆயிரம் கனஅடியில் இருந்து 19 ஆயிரத்து 583 கனஅடியாக குறைந்துள்ளது. இதனிடையே காவிரி நீர் இன்று மாலைக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts