கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி இருப்பதால், கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகா : ஜூன்-28

கர்நாடகாவின் குடகுமலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 600 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், கபினியில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையே, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 912 கனஅடியில் இருந்து தற்போது 3 ஆயிரத்து 278 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 56.19 அடியாகவும், நீர் இருப்பு 22 புள்ளி 43 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர்த் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 500 கனஅடி நீர் மட்டுமே தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கபினி அணையில் தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் ஓரிருநாட்களில் தமிழக எல்லையை வந்தடையும் என்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டும் உயர வாய்ப்புள்ளது.

Related Posts