கமல்நாத்திடம் மீண்டும் விசாரணை

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்திடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ஆம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தில் 2 ஆயிரத்து 733 பேர் கொல்லப்பட்டனர்.  காங்கிரஸைச் சேர்ந்த ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார், கமல்நாத் ஆகியோர்தான் இந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கமல்நாத்துக்கு உள்ள தொடர்பு பற்றிய வழக்கு விசாரணையை, சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் தொடங்குகிறது. முக்கிய சாட்சிகளான டெல்லி எம்.எல்.ஏ மஜிந்தர் சிங் சிர்சா, முக்தியார் சிங் ஆகியோர் விசாரணைக்கு வரத் தயார் என கூறியுள்ளனர். இவர்கள் கமல்நாத்துக்கு எதிராக சாட்சி சொல்ல உள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களான ப. சிதம்பரம், DK சிவக்குமார் ஆகியோரைத் தொடர்ந்து கமல்நாத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Posts