கமல்ஹாசனின் வீடு மற்றும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு போலிஸ் பாதுகாப்பு

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே சுட்டிக்காட்டி,  சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் தெரிவித்தார்.  சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என கமல் பேசிவிட்டதாகவும், சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கமல் இவ்வாறு பேசியதாகவும் பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், நேற்றுஅரவக்குறிச்சி தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில்,கமல்ஹாசனின் வீடு மற்றும் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல் கூறியதை தொடர்ந்து அவர் வீட்டு முன்பு போராட்டங்கள் நடத்த சில இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து   முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே கமலஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

Related Posts