கமல் பேசியது தவறு என்றால், நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசியதும் தவறுதான்:  கே.எஸ்.அழகிரி 

அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்த கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் பற்றிய பேச்சு அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்  தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய கமல்ஹாசனின்  கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் எனவும் அவரது நாக்கில் சனி இருப்பதாகவும் கூறினார்.  தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது எனவும்,  சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக இந்துக்களை பற்றி பேசும் கமல்ஹாசனின் நாக்கை ஒருகாலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,  கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசியது தவறு என்றால், நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசியது சரியா என வினவினார். சுதந்திர இந்தியாவில் முதல் பயங்கரவாதி மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், இந்து மகா சபை போன்றவற்றில் உள்ளவர்கள், மாற்று கருத்து உடையோரை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் எனவும், . ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்புக்கு இணையான அமைப்பு ஆர்.எஸ்.எஸ் எனவும் கூறியகே.எஸ்.அழகிரி  கமல்ஹாசன் கூறியதை ஆயிரம் சதவீதம் ஆதரிப்பதாக தெரிவித்தார்

Related Posts