கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் உடல் நல குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்யூ தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் கடந்தசில தினங்களுக்கு முன்னர் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை முதல்வர் பழனிசாமி, தி.மு.க, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். இந்நிலையில் தா.பாண்டியனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Posts