கருணாநிதிக்கு மருத்துவ உதவி அளிக்க அரசு தயார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

 

திமுக தலைவர் கருணாநிதியின் மேல் சிகிச்சைக்காக உதவிகள் அளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்து வருகிறார் என்று கூறினார். அவரது உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்ததாக தெரிவித்த அவர், மேல் சிகிச்சைக்காக உதவிகள் அளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது என்றார்.

கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்து வருகிறார். தமிழக அரசின் சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் நேரடியாக சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வந்துள்ளனர்.திமுக தலைவர் கருணாநிதிக்கு இதுவரை மருத்துவ உதவி கேட்கப்படவில்லை. அவர் முன்னாள் முதல்வர். 5 முறை முதல்வராக இருந்திருக்கிறார், தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். மருத்துவ உதவி செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். 

இதேபோல் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் பாடுபட்ட திமுக தலைவர் கருணாநிதி நலமடைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்

Related Posts