கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை அறிக்கை

 

 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த அழுத்த குறைபாடு காரணமாக நேற்று நள்ளிரவில், கோபாலபுரம் இல்லத்தில் இருந்து, காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில், இன்று மாலை வரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள், காவிரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல் நலம் பற்றி விசாரித்தனர். இதையடுத்து தற்போது காவிரி மருத்துவமனை, கருணாநிதி உடல் நலம் குறித்து, புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. காவேரி மருத்துமனை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு மருத்துவ உபகரண உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஐசியூவில் இருக்கும் சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts