கருணாநிதியின் திருவுருவ சிலையை மு.கஸ்டாலின் நேரில் சென்று பார்வை

 சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக உருவாக்கப்பட்டு வரும் கருணாநிதியின் திருவுருவ சிலையை மு.கஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

      திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த தீனதயாளன் என்ற சிற்பி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 8 அடி உயர உருவ சிலையை வெண்கல உலோகத்தை கொண்டு வடிவமைத்துவருகிறார். கருணாநிதி இறந்த நூறாவது நாளில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த சிலை நிறுவப்படவுள்ளது. இந்த சிலை தயாரிப்பு பணியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின்இன்று நேரில் சென்று பார்வையிட்டு, சிறு மாற்றங்களை செய்யும்படி சிற்பி தீனதயாளனுக்கு ஆலோசனை வழங்கினார். ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா திருஉருவச் சிலையும் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் சிலைகளையும் கருணாநிதி கேட்டு கொண்டதின் பேரில் இவர் வடிவமைத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts