கருணாநிதியின் நினைவிடத்திற்கு இடம் கொடுக்காத அதிமுக,அவரதுமறைவையும் கொச்சை படுத்துகின்றனர்: மு.க.ஸ்டாலின்

நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஞான திரவியத்தை ஆதரித்து பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், புதுவை உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமல்ல தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்றார்.

காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னர் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதாக ஸ்டாலின் கூறினார். இதனால் எரிச்சலடைந்துள்ள பா.ஜ.க.வினர், திமுகவை இந்துக்களின் எதிரி என தவறான பிரசாரம் செய்வதாக குறிப்பிட்ட அவர்  சமூக நல்லிணக்கத்தை பேணுவதே திமுகவின் குறிக்கோள் என உறுதி பட தெரிவித்தார். எந்த மத த்திற்கும் திமுக எதிரி இல்லை என்ற ஸ்டாலின், சிலரை எதிர்ப்பதால் திமுக மத விரோதியாகவோ, தேச விரோதியாகவோ மாறி விடாது என்றார்.

அதிமுக ஆட்சியால் தமிழகம் எந்த நன்மையும் பெறவில்லை என்றும்  தமது கேள்விகளுக்கு முறையான பதிலை அதிமுகவினர் இதுவரை கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 5 ஆண்டுகால ஆட்சியில் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்ற வில்லை என்றும் தேர்தலுக்காக மட்டுமே மோடி தமிழகத்திற்கு வருவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Related Posts