கருணாநிதி இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பார்: டி.கே.எஸ்.இளங்கோவன்

 

 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் இன்னும் இரண்டு நாட்களுக்கு மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பார் என டி.கே.எஸ் இளங்கோவன், தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்திகளால் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திலும், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலும் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேசிய டி.கே.எஸ் இளங்கோவன், கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராகி விட்டதாகவும், இருப்பினும் இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் கருணாநிதி இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts