கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் விசாரித்தார்.

காய்ச்சல் மற்றும் சிறுநீரக நோய்த்தொற்று காரணமான கடந்த இரண்டு நாட்களாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தொடர் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று அதிகாலை சென்னை காவேரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.    அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக ரத்த அழுத்தம் சீராகியுள்ளது.இருப்பினும் அவரது உடல்நிலை 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கலைஞரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை  தெரிவித்த நிலையில், இன்று தலைவர்கள் பலர் அவரது நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

Related Posts