கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் நிதின் கட்காரி

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பதிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டின் 5 நகரங்களில் “தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம்” என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி, மதுரை, கோவை, நெல்லை என நான்கு இடங்களில்நினைவேந்தல் கூட் டங்கள் நடந்து முடிந்துள்ளன.

ஐந்தாவதாக  சென்னையில் வரும் 30-ந்தேதி “தெற்கில் உதிக்கும் சூரியன்” என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த  கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் தி.மு.க. சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டதை அடுத்து அவரது பெயருடன் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டன.

தி.மு.க. நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்கிறார் என்ற தகவல் பரவியதும், அது தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கான அச்சாரம் என்றும் அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், “அமித்ஷா வருகை பற்றி தங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறினர்.

ஆனால் தி.மு.க. தரப்பில், “அமித்ஷா வருவதாக சம்மதம் தெரிவித்த பிறகே  புதிய அழைப்பிதழ் அச்சிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  தற்போது தி.மு.க. நடத்தும் கூட்டத்துக்கு அமித்ஷா வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அவருக்குப்பதிலாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்நிதின் கட்காரி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை  தி.மு.க. மூத்த தலைவர்களும் உறுதிபடுத்தியுள்ளனர்

Related Posts