கருணாஸை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

அவதூறாக பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

         சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மாநில பொருளாளர் தர்மராஜ், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பல்வேறு தரப்பினரையும் தவறாக பேசிவருவதாக கூறினார். நாடார் சமுதாயத்தினர் பல்வேறு தரப்பினருக்கும்  பல உதவிகளை செய்து வரும் நிலையில், இது போன்று கருணாஸ் தவறாக பேசியது கண்டிக்கதக்கது எனவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் தர்மராஜ் வலியுறுத்தினார்.

Related Posts