கருணாஸ் எம்எல்ஏவுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு

முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் எம்எல்ஏவுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

            முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 23-ந்தேதி நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில், கருணாஸ்  ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி,.  கருணாசுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டார். இதற்கிடையே ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கிலும் கருணாஸ்  கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த வழக்கில் ஜாமீன் கோரி கருணாஸ், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது. அவதூறு வழக்கில் தற்போது ஜாமீன் கிடைத்தாலும் இரண்டாவது வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால்தான் கருணாஸ்  உடனடியாக சிறையில் இருந்து வெளியே வர முடியும் எனபது குறிப்பிடத்தக்கது.

Related Posts