கரும்சாம்பலை வெளியேற்றி வரும் எரிமலை – வான் போக்குவரத்து பாதிப்பு

ஹவாய் தீவில் கிலியோவா எரிமலை கரும்சாம்பலை வெளியேற்றி வருவதால், வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹவாய் : மே-17

கடந்த 12 நாட்களுக்கு முன் வெடிக்கத் தொடங்கிய அந்த எரிமலை, 12 ஆயிரம் அடி உயரத்திற்கு கரும் சாம்பலை வெளியேற்றி வருகிறது. தொடர்ந்து அதிக அளவில் கரும்சாம்பல், ரசாயன வாயுக்கள் வெளியேறலாம் என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதை குறிப்பிடும் வகையில், ரெட் அலர்ட் எச்சரிக்கையை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, அந்த எரிமலையில் இருந்து வெளியான லாவா குழம்புகளால், அதன் அருகில் இருந்த 37 வீடுகள் நாசமானதுடன், 2 ஆயிரம் குடும்பத்தினர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

Related Posts