கரும்புகையை கக்கிய எரிமலை – அச்சத்தில் ஓடிய சுற்றுலா பயணிகள்

இந்தோனிசியாவில் எரிமலை ஒன்றில் இருந்து திடீரென புகையை வெளியேறியதால், அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனிசியா : மே-16

இந்தோனிசியா நாட்டில் உள்ள யோகியகர்டா மற்றும் மத்திய ஜாவா பகுதிகளில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இங்குள்ள எரிமலைகள் புகையை வெளிப்படுத்தி பல ஆண்டுகள் கடந்ததால், தற்போது இந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், மெராபி என்ற மலையில் அமைந்துள்ள எரிமலை ஒன்று திடீரென்று புகையைக் கக்கியது. வெளிவந்த புகையால் வானம் கருப்பாக மாறியதால், அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவம், மத்திய ஜாவா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Posts