கரும்பு கொள்முதல் ஊக்கத் தொகையை டன்னுக்கு 500ரூபாய் உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்

கரும்பு கொள்முதல் ஊக்கத் தொகையை டன்னுக்கு 500ரூபாய் உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளைத் தமிழக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாகவும், . கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளிடம் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கொள்முதல் செய்த கரும்பிற்கு, தமிழக அரசு அறிவித்த விலையை அளிக்காமல், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை வைத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.  அதைப் பெறுவதற்காக  விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் எந்தப் பயனும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார், கடந்த ஆண்டு சட்டப்பேரவையில், தொழில்துறை அமைச்சர் கரும்பு நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்கும் என வெளியிட்ட  அறிவிப்புநீர்மேல் எழுத்தானது எனவும், . இந்த ஆண்டாவது கொள்முதல் செய்யும் கரும்பிற்கு நிலுவைத் தொகையோடு சேர்த்து வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கரும்பு கொள்முதல் விளையாக டன் ஒன்றுக்கு4ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்க வேண்டும் எனவும்,  கடந்த ஐந்து ஆண்டுகளாக, டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 750ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவம அவர் தெரிவித்துள்ளார். நடப்புக் கொள்முதல் பருவத்திற்கு மத்திய அரசு 10 விழுக்காடு பிழிதிறன் உள்ள கரும்பிற்கு 2 ஆயிரத்து 750 ரூபாய் என்று அறிவித்துள்ளது எனவும், ஆனால் தமிழக அரசு கடந்த ஆண்டு மத்திய அரசு விலை 2 ஆயிரத்து 550 ரூபாயுடன், ஊக்கத் தொகையாக 200 ரூபாய் சேர்த்து 2 ஆயிரத்து 750 ரூபாய் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு இலாபப் பகிர்வு முறையை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டதால், மாநில பரிந்துரை  விலையை அறிவிக்காமல், ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 200 ரூபாய் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மத்திய அரசின் ஆதார விலை 2ஆயிரத்து 750 ரூபாய் என்பது, பத்து விழுக்காடு பிழித்திறன் கொண்ட கரும்புக்கு மட்டுமே கிடைக்கும் எனவும்,அதற்குக் குறைவான பிழிதிறன் உள்ள கரும்புக்கு 2 ஆயிரத்து612 ரூபாய் மட்டுமே கிடைக்கும்  நிலை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திப்பதால் கரும்பு விளைச்சல் 250 இலட்சம் டன்னில் இருந்து 90 இலட்சம் டன்னாகக் குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,எனவே, கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், நடப்பு கரும்புக் கொள்முதல் பருவத்தில் டன் ஒன்றுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Posts