கரூர் பேருந்து நிலையத்தில் போலீஸ் என கூறி விவசாயிடம் ஒரு சவரன் நகை திருட்டு 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட சித்தலவாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நடராஜன். இன்று காலை கரூர் சென்ற அவர் அங்கு பணிகளை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் போலீஸ் என கூறி  நடராஜனை அடித்து சோதனை செய்துள்ளார். அப்போது அவர் கையில் அணிந்திருந்த ஒரு சவரண் மோதிரத்தை கழற்றி தரும்படி வற்புறுத்தி வாங்கிக் கொண்ட அந்த மர்ம நபர் நடராஜனை அடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து  நடராஜன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Posts