கரூர் மாவட்டத்தில் மேலும் மூன்று புதிய கதவணைகள் கட்டப்படும் : எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டத்தில் 5 டிஎம்சி நீரை சேமிக்கும் வகையில் மேலும் மூன்று புதிய கதவணைகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மண்மங்கலம் வட்டம் சோமூர், நெரூர் தென்பாகம் மற்றும் நெரூர் வடபாகம் ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் குடி மராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 30 ஆண்டுகள் தூர்வாரப்படாத வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் விரைவாக சென்றது எனவும், இப்பகுதி பொது மக்களின் கோரிக்கையை ஏற்று காளியப்பகவுண்டன் புதூரில் புதிய சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தான்தோன்றி ஒன்றியம் கருப்பூரில் 31.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை திறந்துவைத்து,  அப்பகுதியில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை விஜயபாஸ்கர் நடவுசெய்தார்.

Related Posts