கர்நாடகத்தில் குதிரை பேரத்திற்கு வழி செய்துவிட்டார் ஆளுநர் வாஜூபாய் வாலா

கர்நாடக ஆளுநர் பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்ட் போல செயல்பட்டு வருவதால், அங்கு குதிரை பேரம் நடத்த வழி ஏற்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லை : மே-18

நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாங்குநேரியில் மதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்து, ஆளுநர் ஜனநாயக படுகொலை செய்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.

Related Posts